வெள்ளை மாளிகையின் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா… 6 மணி நேர முற்றுகை போராட்டம் முடிவு….

வாஷிங்டன்: நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு  டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் 6 மணி நேரமாகநீடித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்று வெள்ளை மாளிகையின் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பரைஎதிர்த்துபோட்டியிட்ட  ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவரது வெற்றியை  டிரப் ஒப்புக்கொள்ள மறுத்து வருவதுடன் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். இதற்கிடையில், வரும் 20-ஆம் தேதி 46-வது அமெரிக்க அதிபராக  பைடன்  பதவி ஏற்க உள்ளார்.  அதற்கு முன்னேற்பாடாக அமெரிக்க நாடாளுமன்ற விதிப்படி ஜோ பைடனுடககு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வந்தது.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  இதன் காரணமாக வாஷிங்டன் நாடாளுமன்றம் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள்  நாடாளுமன்றத்திற்குள்ளும் புகுந்து வன்முறையில்  ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி, வன்முறையை கட்டுப்படுத்தினர். இதில் 4 பேர்உயிரிழந்துள்ளனர்.  டிரம்ப் ஆதரவாளர்களின் செயல் உலக நாடுகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வாஷிக்டனில் 15 நாட்கள் அவசர நிலையும் பிரகடனத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,  பிடனை வெற்றியாளராக அறிவிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கி உள்ளது.

மேலும்,  இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று வெள்ளை மாளிகை 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் சமூக செயலாளர் ரிக்கி நிசெட்டா, வெள்ளை மாளிகையின் துணை செயலாளர் சாரா மேத்யூஸ் ஆகியோர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.