சென்னையில் 2 புதிய மெட்ரோ ரெயில் சேவை: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை:

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி   மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல்  முதல்  நேருபூங்கா வரையிலான சுரங்க பாதையையும், டிஎம்எஸ் முதல் சின்னமலை இடையிலான சுரங்கவழிப் பாதைகளிலும்  மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் – நேருபூங்கா, டிஎம்எஸ் – சின்னமலை இடையிலான சுரங்கவழிப் பாதைகளில் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கும் விழா இன்று எழும்பூரில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தனர்.

இதன் காரணமாக பயணிகள் இனிமேல் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணாநகர், கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் எந்தவித இடையூறுமின்றி பயணம் செய்யலாம்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறினார். இந்த விழாவில்,  துணை முதல்வர் ஓபிஎஸ்,  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  பங்கேற்றனர்.

மெட்ரோ ரெயில் டிக்கெட் விவரம்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2 கிலோமீட்டர் தொலைவுக்குப் பத்து ரூபாயும் 2 முதல் 4 கிலோமீட்டர் வரை 20ரூபாயும், 4 முதல் 6 கிலோமீட்டர் வரை 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுபோல  6 முதல் 10 கிலோமீட்டர் வரை 40ரூபாயும், 10 முதல் 15 கிலோமீட்டர் வரை 50 ரூபாயும், 15 முதல் 20 கிலோமீட்டர் வரை 60ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20 முதல் 50 கிலோமீட்டர் வரையும் 70 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விவரங்களை பார்க்கும்போது, சென்னை சென்ட்ரலில் இருந்துகோம்பேடு வரை ஒருவர் பயணம் செய்ய  ரூ.40 கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். 

இவ்வளவு அதிக கட்டணம் கொடுத்து சென்னை பயணிகள் பயணம் செய்வார்களா என்பதும் கேள்விக்குறியே….