இரண்டு கர்பப்பை: ஒரு மாத இடை வெளியில் மூன்று குழந்தைகள் பெற்ற வங்காளதேச பெண்….

--

ங்காளதேசத்தில்  உள்ள ஆத்-தீன்  பெண்கள் மருத்துவக்கல்லூரயில் கடந்த மாத இறுதியில்   ஆரிபா சுல்தானா (வயது 20)  என்ற பெணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் கடந்த 21-ம் தேதி ஆரிபா சுல்தானாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை ஜெசோர் ஆத்-தீன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஷீலா பொத்தார .

அல்டிரா ஸ்கேன் பரிசோதனை மூலம் பரிசோதித்ததில் மற்றொரு கர்ப்பப்பை இருப்பதும், அந்த கர்ப்பப்பையில் இரட்டைக்குழந்தை இருப்பதுவும் தெரியவந்தது.

இதைக் கண்டு டாக்டர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியில் ஆழந்தனர், ஏனெனில் கடந்த 21ம் தேதி ஏற்கனவே அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது..

உடனே ஆரிபா சுல்தானாவுக்கு  சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து இரட்டை குழந்தைகளை வெளியெடுத்தனர்  . இதில் ஒரு குழந்தை ஆண், மற்றொரு குழந்தை பெண்.

இதுபற்றி டாக்டர் ஷீலா பொத்தார் கூறும்போது, “ஒரு கர்ப்பப்பை மூலம் முதல் குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் மேலும் 2 குழந்தைகள் இருப்பது அந்தப் பெண்ணுக்கு முதலில் தெரியாது  என்றும் தாய் மற்றும் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவித்தார், அதுமட்டுமல்லாமல் 10 லட்சம் பேரில் ஒருத்தருக்குத்தான் இதுபோன்று இரு கர்பப்பை இருக்கும் என்றும் தெரிவித்தார்

ஒரே பெண்ணுக்கு இரு கர்ப்பப்பை இருந்து, அந்த இரண்டிலும் அடுத்தடுத்து கர்ப்பம் தரித்து, முதல் குழந்தை பிறந்த 26 நாளில் இரட்டைக்குழந்தை பிறந்திருப்பது மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம்பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “ அவர் முதலிலயே அட்டிரா சவுண்ட் மூலம் பரிசோதனை செய்யாததால் அந்த பெண்ணிற்கு இரட்டை கர்ப்பப்பை  இருப்பது தெரியாது. பிறப்பிலேயே இரட்டைக் கர்ப்பப்பை அமைந்திருக்கும். இது அனைவருக்கும் இருக்காது என்றும் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் கிராமப்புறத்தில் வாழும் பெண்களுக்கு தாங்கள் கருவுற்று இருக்கிறோமா என்பது கூட தெரியாது என்றும் தெரிவிக்கின்றனர்