சீன மீன் காட்சியகத்தில் இருந்த திமிங்கலங்களுக்கு ஐஸ்லாந்தில் ஓய்வு வாழ்க்கை

ரிக்ஜாவிக், ஐஸ்லாந்து

சீனாவில் உள்ள ஒரு மீன் காட்சியகத்தில் இருந்து இரு திமிங்கலங்கள் ஐஸ்லாந்து சரணாலயத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆர்க்டிக் பெருங்கடலில் ஏராளமான திமிங்கலங்கள் வசித்து வருகின்றன.   இந்த திமிங்கலங்கள் நீந்தி ரஷ்ய கடற்பகுதிக்கு வரும் போது சிலர் அவைகளை பிடித்து  விற்று விடுகின்றனர்.   அதனால் இந்த ரஷ்ய கடற்கரை பகுதி திமிங்கலங்களின் சிறை என அழைக்கப்படுகிறது.   இந்த திமிங்கலங்கள் சுமார் 1.5 லட்சம் டாலர் விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த திமிங்கலங்களை பொதுவாக சீனாவை சேர்ந்த மீன் காட்சியகங்கள் வாங்கி காட்சிக்கு வைக்கின்றனர்.   இவ்வாறு சுமார் 10 வருடங்களுக்கு முன்பு ஷாங்காய் மீன்காட்சியகம் இரு திமிங்கலங்களை வாங்கி உள்ளது.    இந்த திமிங்கலங்கள் தற்போது ஐஸ்லாந்துக்கு ஓய்வு வாழ்க்கைக்கு அனுப்பபட்டுள்ளன.

இந்த திமிங்கலங்கள் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள ஐஸ்லாந்தை சேர்ந்தவைகள் அல்ல.   ஐஸ்லாந்தில் மட்டுமே திமிங்கலங்கள் அசிக்கும் சரணாலயம் உள்ளதால் இங்கு அனுப்பப்பட்டுள்ளன.  ஷாங்காயில் இருந்து இரு திமிங்கலங்களும் விமானம் மூலம் ஐஸ்லாந்தில் உள்ள கெஃப்லாவிக் சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த புதன்கிழமை வந்தன.

சுமார் 11 மணி நேர பயணத்தினால் இந்த திமிங்கலங்கள் எவ்வித களைப்போ துயரமோ அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த திமிங்கலங்களின் நிறத்தை வைத்து இவைகளுக்கு லிட்டில் பிளாக் மற்றும் லிட்டில் கிரே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.    இந்த திமிங்கலங்கள் வசிக்க 32000 சதுர மீட்டரில் ஒர் பெரிய கடல் நீர் தொட்டி அமைக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.