மீட்பு பணிக்கான ஏர் இந்தியா விமானங்களில் கமாண்டராக செயல்பட்ட பெண்கள்….

புது டெல்லி:

ரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் இந்திய அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானங்களை இரு பெண்கள் கட்டளையிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் ஒரு விமானம் தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து புறப்பட்டாலும், மற்றொரு விமானம் கேரளாவின் கொச்சியிலிருந்து புறப்பட்டது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு மதியம் 1.11 மணியளவில் புறப்பட்ட மீட்பு விமானத்தை கேப்டன் கவிதா ராஜ்குமார் கமாண்டராக இருந்து வழிநடத்தினர். அதே நேரத்தில் மதியம் 1.17 மணியளவில் புறப்பட்ட கொச்சி-மஸ்கட்-கொச்சி விமானத்தின் தளபதியாக கேப்டன் பிந்து செபாஸ்டியன் இருந்தார் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு விமானங்களும் சனிக்கிழமை மாலை இந்தியா திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்தை அடுத்து, பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.