பிலிப்பைன்ஸை உலுக்கிய மங்குட் புயல் – இதுவரை 43 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மங்குட் புயலால் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கு பகுதி கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

philippines

இந்த வருடத்தின் சக்கி வயந்த புயலாகக் கருதப்பட்ட மங்குட் புயல் பிலிப்பைன்ஸ் கடற்கரைப்பகுதியை தாக்கியது. புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் கூறுகையில், “பிலிப்பைன்ஸின் பக்காயோ இடத்தில் மங்குட் புயல் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதனால் மணிக்கு 300 கிலோமீட்டர் அளவில் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக வீடுகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் சரிந்து சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணி வீரர்கள் துரிதமான மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

mangkhut

இதுவரை இந்தப் புயலுக்கு 59 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் ” என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த மங்குட் புயல், தற்போது சீனாவின் தென்பகுதி மற்றும் ஹாங்காங்கில் தனது தாக்கத்தைக் காட்டி வருகிறது.

இதன் காரணமாக சீனாவில் இதுவரை 4 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2018-ம் ஆண்டின் சக்தி வாய்ந்த புயலாக மங்குட் புயலை வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்ததன் காரணமாக இதனை மிக அதிக சக்தி வாய்ந்த புயல் எச்சரிக்கையாக சீனா அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-