லாஸ்ஏஞ்சலிஸ்: மாதம் ஒன்றுக்கு இந்திய ரூபாயில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை நுகர்வதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் புகழ்பெற்ற முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன்.

உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரராக விளங்கிய மைக் டைசன், அத்துறையில் பல சாதனைகளை செய்தவர். ஒரேசமயத்தில் WBA, WBC மற்றும் IBF பட்டங்களை வைத்திருந்த உலகின் முதல் குத்துச்சண்டை வீரராக இவர் விளங்கினார்.

தனது 20ம் வயதிலேயே உலகின் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரராக உருமாறிய இவர் செய்த சாதனைகள் மிக அதிகம். அதேசமயம், இவரது குத்துச்சண்டை தொழிலின் கடைசி காலத்தில் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டன.

அத்துறையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இவர் கஞ்சாப் பண்ணை தொழிலில் இறங்கினார். கலிஃபோர்னியாவில் கஞ்சா புகைப்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று. தற்போது 53 வயதாகும் டைசனுக்கு அத்தொழில் லாபகரமானதாக திகழ்கிறதாம்.

இதனையடுத்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டைசனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தனது பண்ணையில் ஒரு மாதத்திற்கு சுமார் 40000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள கஞ்சா புகைப்பேன் என்று கூறியுள்ள அவர், தான் எப்போதும் இடைவிடாமல் புகைத்துக்கொண்டே இருப்பேன் என்று பெருமையாக கூறியுள்ளார்.