வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

ஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட படம் திட்டமிட்டபடி இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாததால் மே 10-ம் தேதி ரிலீஸ் என மாற்றப்பட்டது.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, இன்று காலை தான் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை வாரிய உறுப்பினர்கள் உடனடியாகப் படத்தைப் பார்த்து, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.