தனுஷின் ‘பட்டாஸ்’ திரைபடத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார் .

இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்.

கடந்த ஜூலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்த படக்குழு சமீபத்தில் படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டது .

ஜனவரி 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளது.