யு சான்றிதழ் பெற்ற ஜி.வி.பிரகாஷ்ஷின் த்ரில்லர் படம் ‘வாட்ச்மேன்….’!

விஜய் இயக்கி டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமர், ராஜ் அர்ஜூன், யோகி பாபு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாட்ச்மேன்’.

வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

த்ரில்லட் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு யு சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரில்லர், ஹாரர் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் தான் வழங்கப்படும் ஆனால் இப்படம் யு சான்றிதழ் பெற்றிருப்பது இப்படத்தின் தனி சிறப்பாக கருதப்படுகிறது

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: gv prakash, thriller, U certificate, Watchman
-=-