உ.பி.யில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ: விரைவில் கைதாக வாய்ப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ரவிந்திரநாத் திரிபாதி  உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பஹதோஹி தொகுதி பாஜக எம்எல்ஏ ரவிந்திரராத்  திரிபாதி. அவர் உள்ளிட்ட 6 பேர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இவர்கள் அனைவரும் ஓட்டல் ஒன்றில் தம்மை அடைத்து வைத்து ஒரு மாதம் முழுவதும் தம்மை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினர் என்று கூறி இருந்தார். அதனால் தாம் கர்ப்பமானதாகவும் பின்னர் அதை கட்டாயப்படுத்தி கலைத்தனர் என்றும் அப்பெண் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பான ஆதாரங்களையும் அவர் போலீசிடம் ஒப்படைத்தார். இந் நிலையில் ரவிந்திரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜக எம்எல்ஏ திரிபாதி விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

பாலியல் பலாத்கார வழக்குகளில் பாஜக எம்எல்ஏக்கள் சிக்குவது புதிதல்ல. ஏற்கனவே இதே உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் சிக்கி தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார்.