க்னோ

முசாபர்நகர் கலவரத்தில் பாஜகவினர் மீது பதியப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்ய உ பி அரசு சிறப்பு நீதிமன்றத்தை அணுக உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கலால் என்னும் சிற்றூரில் ஒரு பெண்ணை இஸ்லாமிய வாலிபர்கள் கிண்டல் செய்ததில் கடும் கலவரம் ஏற்பட்டது.  இதில் ஜாட் இன மக்களும் இஸ்லாமியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  இந்த கலவரம் முசாபர்  நகர் மாவட்டம் முழுவதும் பரவி அண்டை மாநிலங்களிலும் பரவின.

இந்த கலவரம் தொடர்பாக 16 சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்களும் உள்ளூர் அரசியல்வாதிகள் மீதும் வழக்கு பதியப்பட்டது.  இவர்களில் பலர் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஞ்சிவ் பலியான் மக்களவை தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று மோடியின் அமைச்சரவையில் இடம் பிடித்தார்.   மற்றும் சுரேஷ் ரானா, சங்கீத் சோம் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த கலவரம் குறித்து சுமார் 72 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  அவற்றைத் திரும்பப் பெற யோகியின் தலைமையில் ஆன உத்திரப் பிரதேச பாஜக அரசு முயன்று வருகிறது    இந்த வழக்குகளை திரும்பப் பெற அரசு சார்பில் நீதிமன்றங்களில் மனு அளிக்கப்பட்டுள்ளன.  இவற்றில் பெரும்பாலான வழக்குகளைத் திரும்பப் பெற நீதிமன்றங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

அரசு சார்பில் தொடரப்படும் வழக்குகளை விசாரணைக்கு முன்பு அல்லது விசாரணையின் போது  அந்தந்த நீதிமன்றங்களில் இருந்து திரும்பிப் பெற அரசுக்கு உரிமை உண்டு.   ஆனால் சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற இதற்காக உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி தேவை ஆகும்.

எனவே இந்த வழக்குகளை ரத்து செய்ய அனுமதி கோரி உ பி அரசு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளதாக மாநில அரசின் சார்பில் கோரிக்கை விடத் திட்டமிடப்பட்டுள்ளது.  தற்போது முதல் கட்ட நடவடிக்கையாக இந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.   அதன்  பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்து இந்த வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதி கோர உத்தேசித்துள்ளது.