உத்தரப்பிரதேசம் : இஸ்லாமியக் காய்கறி வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி அடிப்பு

கோபா,

பி மாநிலம் மகோபா மாவட்டத்தில் இஸ்லாமியக் காய்கறி வியாபாரிகளை ஒரு சிலர் தாக்கி விற்பனையை நிறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் பரவி வரும கொரோனா வைரஸ் தொற்று தப்லிகி ஜமாத் அமைப்பின் மாநாட்டுக்கு தொடர்புடையவ்ரக்ள் மூலம் அதிக அளவில் உண்டானதாகத் தகவல்கள் வந்தன.   மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி மூன்றில் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துக் கொண்டோர் மற்றும் அவர்களின் தொடர்புடைய்வரக்ளால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இஸ்லாமியர்கள் மீது கடும் வெறுப்பு பிரசாரம் தொடங்க ஆரம்பித்தது.  மத்திய அரசு இவ்வாறு கொரோனா தாக்குதலுக்கு மத ரீதியாக குற்றம் சாட்டுவது தவறு என எச்சரிக்கை விடுத்தது.  ஆயினும் பலர் இன்னும் அந்த செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல இஸ்லாமியர்கள் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

அம்மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் உள்ள சிற்றூர்களில் சில இஸ்லாமிய வியாபாரிகள் காய்கறி விற்று வந்துள்ளனர். மக்கள் அவர்களிடம் காய்கறிகள் வாங்கி உள்ளனர்.  அப்போது அங்கு ஒரு கும்பல் அங்கு வ்ந்துள்ள்து.  வியாபாரிகளின் வண்டிகளில் உள்ள பிறை சின்னம் உள்ளிட்டவற்றை மக்களிடம் காட்டிய அந்த கும்பல் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களிடம் காய்கறி வாங்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே வாங்கிய காய்கறிகளை மக்களைத் திருப்புக் கொடுக்கச் சொல்லி உள்ளனர்.  அதன் பிறகு அந்த வியாபாரிகளை அடித்து அங்கு வியாபாரம் செய்யக்கூடாது என மிரட்டி உள்ளனர்.  அடித்து விரட்டப்பட்ட அந்த வியாபாரிகள்  அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.  இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.