பாடூன், உ பி

ரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு காவல்துறையினர் கொடுமையான தண்டனைகள் விதிக்கின்றனர்.

மாதிரி புகைப்படம்

’சட்டம் தன் கையில்’ இருப்பதால் சாலையில் நடப்போருக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர், போலீசார்.

கொரோனாவை கட்டுப்படுத்த அமல் படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு காரணமாக டெல்லியில் தினக்கூலிகளாகப் பணி புரிந்த ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து விட்டனர்.

ரயில், பேருந்து உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடாத நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் கால்நடையாகவே டெல்லியில் இருந்து சொந்த ஊர்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

டெல்லியில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ள தனது கிராமத்துக்குத் தொழிலாளி  ஒருவர், தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் நடந்தே வந்தார்.

உ.பி.மாநிலம் பாடூன் என்ற இடத்தில் அவர்களை வழி மறித்த காவலர் ஒருவர், என்ன, ஏது என்று எந்த விசாரணையும் நடத்தாமல் .’’ நீ ஊரடங்கு உத்தரவை மீறி விட்டாய்.. சாலையில் தவளை போல் குதித்துக் குதித்து சொந்த ஊருக்கு போ’’ என அந்த தொழிலாளிக்குக் கட்டளை பிறப்பிக்க- அவரும் அப்படியே செல்ல நேர்ந்தது.

வேறு சிலரும் இதே போல் பணிக்கப்பட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவ-

போலீசுக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த தண்டனையைக் கொடுத்த காவலர் வேலையில் புதிதாகச் சேர்ந்தவர் என உயர் அதிகாரிகள் , சால்ஜாப்பு சொல்கிறார்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்