வாஷிங்டன்:

இண்டோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் ராணுவ உறவில் உள்ள நாடுகள் ரஷ்யாவிடம் ஆயுத கொள்முதல் செய்வதற்கு அமெரிக்காவின் கடற்படை அதிகாரி பிலிப் டேவிட்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் எந்த விதமான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்கா பசிபிக் கமாண்டர் பிரதிநிதியான பிலிப் டேவிட் சன் ஆர்ம்ட் சர்வீஸ் கமிட்டி செனட் உறுப்பினர்களிடம் பேசுகையில் இதை தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ இந்தியா நீண்ட நாட்களாகவே ரஷ்யாவுடன் ஆயுத கொள்முதல் தொடர்பில் உள்ளது. சில தொழில்நுட்பம் மற்றும் பயிற்சியையும் பின்பற்றுகிறது. இந்த வரலாற்று பின்னணி கொண்ட உறவை முறிக்க வேண்டும். நேரடியாக முறிப்பது சரியாக இருக்காது. எனினும் அதை நோக்கி நாம் பணியாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.