வாஷிங்டன்: கியூபா  நாட்டை பயங்கரவாத நாடு என அமெரிக்கா அறிவித்து உள்ளது. அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல ஆண்டுகாலம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கியூபா, பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி மூலம், 1959ம் ஆண்டு, அமெரிக்காவின் பிடியிலிருந்து விடுபட்டது. பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் தனி நாடாக ஆட்சி செய்து வருகிறார்.  இதன் காரணமாக அமெரிக்கா கியூபா இடையே நெருடல்கள் தொடர்ந்து வருகிறது.

முதன்முதலாக கடந்த 1960ம் ஆண்டில் கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்த அமெரிக்கா அதன் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது. கியூபா முதன்முதலில் 1982 ஆம் ஆண்டில் ரீகனின் கீழ் பயங்கரவாத பட்டியலில் இடம்பிடித்தது,  ஆனால், காஸ்ட்ரோ, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல், தன்னிச்சையாகவும், சிறப்பாகவும் ஆட்சி செய்து வந்தார். உலக நாடுகளிடையே கியூபாவை தலை சிறந்த  நாடாகவும் மாற்றினார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்ற பிறகு 2015ம் ஆண்டு கியூபாவிடம் ஒபாமாக அரசு நட்பு ரீதியிலான உறவை ஏற்படுத்தினார். இதனால் சுமார் 50 ஆண்டு கால பகை நீர்த்து போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் அமெரிக்கா தனது அதிகாரத்தை காட்டத் தொடங்கியது. இதனால்,  மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கியூபாவை  அமெரிக்கா பயங்கரவாத நாடாக அறிவித்து உள்ளது.  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று, புதிய அதிபராக ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போது அதிபர் டிரம்ப்  கியூபாவை மீண்டும் பயங்கரவாத நாடாக அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்பின்  அறிவிப்புக்க கியூபா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.