நியூயார்க்:

மெரிக்காவில் வேலையில்லாதவர்களின் விகிதம் 30 % அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, செயின்ட் லூயிஸின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேம்ஸ் புல்லார்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அமெரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டாம் 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

இந்த காலாண்டில் இழந்த 2.5 டிரிலியன் டாலர் வருவாயை சரி செய்ய, புதிய திட்டம் ஒன்ரை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் புல்லார்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொலைபேசியில் பேசிய அவர், வருவாயை சரி செய்ய கூடுதல் வழங்கும் திட்டம் தற்போது தயராக உள்ளது என்றும் அவர் கூறினார். தற்போது நிலவும் பிரச்சினைகளை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக பெரியளவிலான நிதிதேவை கொண்டுள்ள அமெரிக்காவுக்கும் தேவையான நிதியுதவிக்கான மாற்று திட்டத்தை அமெரிக்க காங்கிரஸும், வெள்ளை மாளிகையும் விரைவாக அறிவிக்க வேண்டும் என்றும் புல்லார்ட் கேட்டு கொண்டுள்ளார்.

சிறு வணிகங்கள்: சிறு வணிக கடன்களைப் பொறுத்தவரை, மத்திய வங்கி ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த திட்டத்தை தயாரிக்க சிறிது காலம் எடுத்து கொள்ளும். இதனால், சிறு வணிக கடன் திட்டங்களைப் பயன்படுத்துவது அல்லது காங்கிரஸ் வங்கிக் கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பது நன்மை பயப்பதாக இருக்கும் என்றும் புல்லார்ட் கூறினார்,

தனிப்பட்ட தொழில்கள் அல்லது விமானத் தொழில் அல்லது ஹோட்டல்கள் போன்ற தொழில்களை ஆதரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும், ஆதரவு இல்லாததால் யு.எஸ் நிறுவனங்கள் அல்லது தொழில்களை இழக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ஒரு வைரஸ் காரணமாக ஒரு பெரிய தொழிற்துறையை இழப்பது முற்றிலும் முட்டாள்தனம்” என்றும் புல்லார்ட் தெரிவித்துடன், அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வேலையின்மை காப்பீடு என்பது தொழிலாளர்களுக்கு இழந்த வருமானத்தில் 100% ஈடுசெய்ய வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த இடையூறு ஏற்படுவதால் அதை “தொற்று காப்பீடு” என்று அழைக்கவும் புல்லார்ட் வலியுறுத்தினார்.

வோல் ஸ்ட்ரீட்டை விட பொருளாதாரத்தில் வைரஸ் தொடர்பான பணிநிறுத்தங்கள் பற்றிய செயின்ட் லூயிஸ் மத்திய வங்கியின் பார்வை மிகவும் மோசமானது என்றும் கூறிய புல்லார்ட் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14% என்ற வருடாந்திர வீதத்தில் இந்த எண்ணிக்கை குறையும் என்று ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ள புல்லார்ட், அதே நேரத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா கார்ப் மற்றும் ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் ஆகிய இரண்டும் 12% வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கோல்ட்மேன் சாச்ஸ் குரூப் இன்க். 24% சரிவை கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடும் என்பதைக் ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் நாங்கள் அந்த சவாலினையும் கடந்து செல்வோம். மேலும் சூழ்நிலையை புரிந்து கொண்டு அந்த நெருக்கடியையும் சமாளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.