காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னதாக தொலைத்தொடர்பு சேவைகளை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்த நிலையில், மீதம் உள்ள சேவைகளை செயல்பாட்டிற்கு கொண்டுவரவும், மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும் அமெரிக்க எவ்வாறு இந்தியாவுக்கு அழுத்தம் தரப்போகிறது என அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கைது, தொலைத்தொடர்புகள் துண்டிப்பு போன்ற கட்டுப்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன. காஷ்மீர் பகுதியில் மத்திய அரசால் கடும் மனித உரிமை மீறல் நடந்து வருவதாக பல்வேறு நாடுகள் அளித்த புகாரின் அடிப்படையில், தெற்கு ஆசியாவின் மனித உரிமை: அரசு மற்றும் அப்பகுதியின் கருத்துக்கள் என்கிற தலைப்பில் விசாரணை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த விசாரணையில், காஷ்மீர் மட்டுமல்லாமல், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளில் நிகழும் மனித உரிமைகள் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அவையின் தலைவர் பிராட் ஷெர்மன் தனது தொடக்க உரையின் போது விசாரணையின் கவனம் முழுவதுமாக காஷ்மீர் மீதே இருக்கும் என்று தெரிவித்தார். இதனால் நேற்றைய நாளின் பிற்பகல் வரை இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டது.

அப்போது, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள், நெருக்கடிகள் இருக்கிறதா ? என டெக்ஸாஸை சேர்ந்த காங்கிரஸ் பெண் ஷீலா ஜாக்சன் லீ, ஹௌடி மோடி கூட்டத்தில் பங்கேற்ற ஜாக்சன் லீயிடம் கேள்வி எழுப்ப, ஆம் இருக்கிறது என்றும், 72,000 அடி தூரமுள்ள நமக்கு இது ஒரு நெருக்கடி போலவும், சம்பந்தப்பட்ட மக்களுக்கு இது ஒரு பேரழிவு போலவும் அமைந்திருக்கிறது என தெற்கு மற்றும் மத்திய ஆசியச் செயலர், மனித உரிமை ஆணையர் ராபர்ட் டெஸ்ட்ரோ விளக்கம் அளித்தார்.

முன்னதாக தொடக்க உரையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் உதவி செயலாளர் ஆலிஸ் ஜி வெல்ஸ், “நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் என அனைவரும் இந்திய அரசிடம் பொது அமைதியை ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். துண்டிக்கப்பட்ட தொடர்புகளை சீரமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தரைவழி தொலைத்தொடர்பு மற்றும் போஸ்ட் பெயிட் அலைப்பேசி சேவைகள் கடந்த வாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரன ப்ரீபெயிட் சேவைகள் மற்றும் இணைய சேவைகள் இன்னமும் அங்கு செயல்பாட்டிற்கு வரவில்லை. பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. அதனால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு பிரதான தடையாக உள்ளது. சிம்லா ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும், முக்கிய தடையானது பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகும்.

1972-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தை பதற்றங்களைக் குறைப்பதற்கான அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இருதரப்பு உரையாடலை மறுதொடக்கம் செய்வதற்கு நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு முயற்சி தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் காஷ்மீரில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்பாக பேசிய நாடாளுமன்ற குழு தலைவர் பிராட் ஷெர்மன், ”தினமும் அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து நமக்கு ஒரு குறிப்பிட்ட பார்வை இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போது விர்ஜினியா பகுதியை சேர்ந்த அபிகெய்ல் ஸ்பேன்பெர்க் என்கிற பெண், தனது பிராந்திய மக்களின் உறவினர்கள் கூறும் கருத்துக்களும், இந்திய அரசின் கருத்துக்களும் வேறு வேறு விதமாக இருப்பதாக கூறியதோடு, தனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும் என்றும், ஆனால் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் குறைந்த தகவல்களே உள்ளன என்றும் தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட வெல்ஸ், மூத்த பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காதது தான் இந்திய அரசுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள இயலாமல் செய்துவிட்டது என்று விளக்கினார்.
அதை தொடர்ந்து க்ரிஸ் வேன் ஹாலனுக்கு காஷ்மீருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில், அது தொடர்பாக பேசிய சென்னையை பிறப்பிடமாக கொண்ட வாஷிங்டன் பகுதியை சேர்ந்த பெண் ப்ரமிளா ஜெயபால், “குழந்தைகள் கூட செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். யாரையும் காஷ்மீருக்குள் அனுமதிக்காதது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருக்கிறது. இதை ஏற்க முடியாது. யாரையும் அனுமதிக்க முடியாது என்று இந்திய அரசால் சொல்ல முடியாது. மோசமான மத சகிப்புத்தன்மை கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இதை நான் மகிழ்ச்சியுடன் சொல்லவில்லை. ஆனால், இந்தியாவில் மத சகிப்புத்தன்மை எனக்கு பெருமை அளிக்கிறது என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். ஏனெனில் நான் அங்கு பிறந்து, இங்கு 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன் என்பதால் இதை விளக்குகிறேன்” என்று தெரிவித்தார்.

மற்றொரு பிரதிநிதியான ஜிம் கோஸ்டா, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் இருந்தது உண்மையா ? என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த வெல்ஸ், அவை உண்மை தான் என்றும், அங்கு மனித உரிமை மீறல்கள் இருந்ததாகவே தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஷெர்மன், “2016ம் ஆண்டுக்கான குடியுரி மசோதாவின் படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதால், இஸ்லாமிய அகதிகள் இடையே அது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்றும், இது சாதாரன மசோதாவா இல்லை இதை நிறைவேற்ற இந்தியா தீவிரம் காட்டுகிறதா ? இதில் இந்தியா வித்தியாசம் காட்ட விரும்புவதை நாம் கவனத்தில் கொண்டுள்ளோமா ? ஒருவரின் மத உரிமைகளின் அடிப்படையில், அவரின் சட்ட உரிமைகளை வரையறுக்கும் இந்தியாவின் கருத்தை நாம் கண்டிக்கிறோமா ?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டெஸ்ட்ரோ, “ஆம், அதைத்தான் நாம் இங்கு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய வெல்ஸ், இந்தியாவின் சமீபத்திய வரலாறுகளை கோடிட்டு காட்டி, ”இந்தியாவின் ஜனநாயகப்பூர்வமான நடவடிக்கைகளை அமெரிக்க புரிந்துக்கொண்டுள்ளது. அதன் மீதுள்ள நிர்வாக ரீதியிலான சவால்களையும் புரிந்துக்கொண்டுள்ளது. அமெரிக்க இந்திய உறவு என்பது ஒரு கூட்டணி போன்றது. நாங்கள் அதை மதிக்கின்றோம். எனவே இது தொடர்பான உரையாடல்கள் இந்தியாவுடன் தொடரும். இந்திய அமைப்புகள் நமது பார்வையில் தாமதமாகவே பதில் தருகின்றன. இது ஆணையிடும் உறவு இல்லை. கூட்டாண்மையின் உறவு. அதை நிச்சயம் அனைவரும் அறிவீர்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா தொடர்ந்து காஷ்மீரில் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை சீரமைக்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.