அமெரிக்காவில் கடந்த 24மணி நேரத்தில் 1லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு… அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவு?

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்காடிவில் வரும்  செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3ந்தேதி) அங்கு ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்கம் வேகம் எடுத்திருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்ப்படுகிறது.