கத்தார் ஆதரவாளர்களுக்கு சிறை : யுஏஇ அறிவிப்பு

க்கிய அரபு எமிரேட்ஸ்

த்தார் நாட்டின் மீது இரக்கம் கொண்டு ஆதரவளிக்கும் சமூக மீடியாவை சேர்ந்தவர்கள் யாராக இருப்பினும் வழக்கு தொடரப்பட்டு 15 வருட சிறை மற்றும் அபராதம் உண்டு,  அரசு அறிவிப்பு.

கத்தார் நாட்டுடன் உறவு முறித்துக் கொண்ட நாடுகளில் யுஏஇ யும் ஒன்று.

அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஹமத் சைஃப் அல் ஷாம்சி ஒரு அறிக்கை அளித்துள்ளார்.

அதன் விவரம் :

கத்தார் நாட்டின் மீது இரக்கமோ ஆதரவோ எந்த ஒரு அனுதாபமோ காட்டும் சமூக தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அது சமூக தளமோ, எழுத்து உலகமோ, கத்தாரின் ஆதரவு செய்தி வெளியிட்டால் அரச துரோகக் குற்றம் இழைத்ததாக கருதப்படும்

இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்று முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 136,000$ அபராதமும் விதிக்கப்படும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது