ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி நிறுவனங்கள் செப்டம்பரில் மீண்டும் திறக்க வாய்ப்பு..!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி நிறுவனங்கள் செப்டம்பரில் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது.

அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் தலைமையில், கல்வி மற்றும் மனிதவள கவுன்சில், ஐக்கிய அரபு அமீரகம் வெளியுறவு மற்றும் நடைபெற்ற கூட்டத்தில் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் ஹுசைன் பின் இப்ராஹிம் அல் ஹம்மடி, பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பொது கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் செப்டம்பர் மாதத்தில் இருக்கும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் நன்கு ஆய்வு செய்யப்பட்ட திட்டத்தின் படி நடைபெறும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைபெறும். மாணவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் முக்கியமாக கருதுகிறது என்று தெரிவித்தார்.

மாணவர்கள், கற்பித்தல் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வழங்கிய தேவைகளுக்கு ஏற்ப நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து முறைகள் கிருமி நீக்கம் செய்வதன் மூலமும் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அல் ஹம்மடி வலியுறுத்தினார்.