கேரளாவுக்கு மத்தியஅரசு வழங்கும் நிவாரண நிதியைவிட ரூ.100 கோடி அதிகமாக வழங்கும் அமீரகம்

திருவனந்தபுரம்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் ரூ.700 கோடி நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவித்துள்ளது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பில் கேரள சிக்குண்டு சின்னாப்பின்னமாகி உள்ளது. கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலை யில், கேரளாவை பழைய நிலைக்கு  சீரமைக்க ஆயிரக்கணக்கான கோடிகள் தேவைப்படும் நிலையில், உலக நாடுகள் கேரளவுக்கு  நிவாரண நிதிகள் வழங்கி உதவி செய்து வருகின்றன/

இந்த நிலையில்,   கேரளத்தில் சீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகளுக்கு எழுநூறு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஐக்கிய அமீரகம் முன்வந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிம்  தெரிவித்துள்ளார்.

மேலும், கேரள வெள்ளப்பாதிப்பு குறித்து விவாதிக்க இன்று மாலை 4மணிக்கு   திருவனந்த புரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். அதுபோல வெள்ளச் சேதம், சீரமைப்பு பணிகள், மக்களின்  மறுவாழ்வுப் பணிகள் குறித்துப் பேசுவதற்காகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை ஆகஸ்டு முப்பதாம் தேதி கூட்டுமாறு ஆளுநருக்குப் பரிந்துரைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்றும் கூறினார்.

கேரள வெள்ளப்பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப்பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் ரூ.100 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு, மேலும் ரூ.500 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரி வித்தார்.

ஆக மொத்தம் மத்திய அரசு சார்பில் கேரள மாநில அரசுக்கு நிவாரணை நிதியாக ரூ.600 கோடி வழங்கப்படுவதாக மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளது.

நமது நாட்டை சேர்ந்த ஒரு மாநிலத்தின் புணரமைப்பு தேவைக்காக, அந்த மாநிலம் கோரும் வெள்ள நிவாரண நிதியை  வழங்க மறுத்து ரூ.600 கோடி மட்டுமே வழங்கிய மத்திய அரசின் செயலையும், ஆமீரகத்தின் 700 கோடி ரூபாய் நிவாரண நிதியையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள்  சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மாற்றுக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்திய அரசின் பாராமுகம் இந்த நிகழ்வு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.