அமீரகம் : 48 மணி நேர இலவச பயண விசா அறிமுகம்

 

துபாய்

மீரகத்தில் சுற்றுப்பயணம் செல்வோரை அதிகரிக்க 48 மணி நேர இலவச பயண விசாவை அந்த நாடு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.   குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.  அமீரக அரசு அறிவிப்பின் படி சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் கடந்த ஆண்டு சுற்றுலா சென்றுள்ளனர்.

.

அமீரகத்துக்கு கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டை விட 15% சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ள்னர்.   இவ்வாறு சுற்றுலா செல்பவர்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியர்கள் ஆவார்கள்.    தங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் இருந்து அமீரகம் பயணம் செய்ய தற்போது 48 மணி நேர இலவச பயண விசா அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.   இந்த விசா மூலம் குறைந்த நாட்கள் பயணம் செய்ய விரும்பும் சிக்கன பயணிகளும் அவசரத் தேவைக்கு செல்வோரும் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுளது.

இவ்வாறு 48 மணி நேரம் இலவச விசாவில் செல்வோர் தங்கள் பயணம் போதுமான அளவு இல்லை எனில் மேலும் நீட்டிக்க முடியும்.   இந்திய மதிப்பில் ரூ.930 செலுத்துவோருக்கும் மேலும் 96 மணி நேரமாக விசா நீட்டிப்பு செய்யப்படும்.