பிரதமர் மோடிக்கு ‘சயித் விருது’ வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமிரகம் அறிவிப்பு

துபாய்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரசு அமிரகத்தின் உயர்ந்த விருதான  ‘சயித் விருது’ வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமிரகம் அறிவித்து உள்ளது.

ஐக்கிய அரபு அமிரகத்தின்  மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம், நாட்டின்   அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு  வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்தமுறை இந்திய பிரதமருக்கு வழங்கப்படு வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன்  உறவுகளை பராமரிப்ப தில் பிரதமர் நரேந்திர மோடியின்  முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும், இந்தியா வுடனான எங்களது உறவு வலுவானது, இந்த உறவை பிரதமர் மோடி மேலும் வலுப்படுத்தியதுடன், முக்கியத்துவம் கொடுத்தார்.

இரு நாடுகளுக்கும் நீண்ட கால நட்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை உறுதிப் படுத்துவதில் நரேந்திர மோடியின் பங்களிப்பை  பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.  இந்த விருது ஐக்கிய அரபு அமிரகத்தின் ஜனாதிபதி வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள  ஐக்கிய அரபு அமிரகத்தின் அதிபர் ஷேக் காலிஃபா ( Shaikh Khalifa) தனது டிவிட்டர் பக்கத்தில்,  இந்தியாவுடனான வரலாற்று மற்றும் விரிவான மூலோபாய உறவுகளை நாங்கள் கொண்டுள்ளோம். எனது அன்பான நண்பர் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் முயற்சிகளை  பாராட்டும் வகையில் அவருக்கு, நாட்டின்  உயர்ந்த விருதான சயித் விருது வழங்கப்படுகிறது என்று கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.