துபாய் :

ஸ்லாமிய தேசமான ஐக்கிய அமீரகம், கடுமையான சட்டங்களை அமுல் செய்யும் நாடுகளில் ஒன்றாகும்.

‘இம்’ மென்றால் சிறைவாசம் என்ற சொல், இந்த நாட்டுக்கு ரொம்பவே பொருந்தும்.

ஆனால் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், இஸ்லாமிய சட்டத்தில் பெரும் மாறுதல்களை அந்த நாடு கொண்டு வந்துள்ளது.

அந்த நாட்டில் மது அருந்துவது மற்றும் மது பாட்டில் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் 21 வயது நிரம்பியோர் மது அருந்த ஐக்கிய அமீரகம் இப்போது அனுமதி வழங்கியுள்ளது.

திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்றும் அந்த நாடு அறிவித்துள்ளது.

இதுவரை கல்யாணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாழ்வது ஐக்கிய அமீரகத்தில் பெரும் குற்றமாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி