தேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்!

ஷார்ஜா: அமீரக நாட்டின் 49வது தேசிய தினத்தை முன்னிட்டு, 472 கைதிகளை விடுவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.

இந்தக் கைதிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான், 628 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, உம் அல் குவைன் மற்றும் அஜ்மான் ஆட்சியாளர்களும் கைதிகளுக்கு விடுதலை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.