செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அமீரகத்தின் ’ஹோப்’ விண்கலம் பயணத்தைத் தொடங்கியது

னேக்‌ஷிமா

ப்பானின் தனேக்‌ஷிமா ராக்கெட் தளத்தில் இருந்து அமீரகத்தின் ’ஹோப்’ விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் விண்வெளி ஆய்வுத் துறையில் அனுபவமற்ற நாடாக உள்ளது.  உலகில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் அமீரகத்தில் விண்வெளி ஆய்வு மிக மிகக் குறைவாகவே உள்ளது.   இதையொட்டி அமீரகத்தின் பொறியாளர்கள் அமெரிக்க வல்லுநர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.  அதனையொட்டி ஹோப் என்னும் விண்கலத்தை அவர்கள்  உருவாக்கினார்கள்.

இந்த பணியின் தொடக்கத்திலேயே அமீரகம் இந்த விண்கலம் முழுக்க முழுக்க தானே உருவாக்கப்போவதாக அறிவித்தது.   இந்த விண்கலம் உருவாக்கும் அனுபவம் மற்றும் தொழிற்கல்வி போன்ற உதவிகள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டது.   இந்த விண்கலம் கொலரோடா பல்கலைக்கழகம் மற்றும் துபாயின் முகமது பின் ரஷீத் விண்வெளி மையம் போன்ற இடங்களில் ஒருவாக்கம்பட்டன்.

இந்த விண்கலத்தின் மூலம் செவ்வாயில் தண்ணீரின் மூலப் பொருட்களான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை தொடர்ந்து வெளியேறிய வண்ணம் இருபதை ஆய்வு செய்ய அமீரகம் திட்டமிட்டுள்ளது.   மேலும் செவ்வாய்க் கிரகத்தின் கால நிலை, பருவ நிலைகள் குறித்த ஆய்வும் நடைபெற உள்ளன.  இந்த விண்கலம் கடந்த வாரம் ஏவப்பட திட்டமிட்ட நிலையில் மோசமான வானிலை காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 1.58 மணிக்கு ஜப்பானின் தனேக்‌ஷிமா ராக்கெட் தளத்தில் இருந்து இந்த ஹோப் விண்கலம் விண்ணில்செலுத்தபட்டுள்ளது.  இந்த தகவலி அமீரகத்தின் விண்வெளி அமைப்பு டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.    இன்னும் 200 நாட்களில் இந்த விண்கலம் செவ்வாய்க் கிரக சுற்றுப்பாதையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.