அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் இருக்கும், முன்னணியில் இருந்து பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு முதலில் இந்த வைரஸ் தடுப்பு மருந்து அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுகாதார மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் (மொஹாப்) கோவிட் -19 தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்து “அவசரகால ஒப்புதல்” ஒன்றை அறிவித்துள்ளது. வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ள முன்னணி சுகாதார தொழிலாளர்களுக்கு இந்த தடுப்பு மருந்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஒருவர் அறிவித்தார். இது எந்த ஆபத்துகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கும். “தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கான அவசரகால ஒப்புதல் (அ) விரைவான அங்கீகார செயல்முறையை அனுமதிக்கும் விதிமுறைகள் மற்றும் சட்டங்களுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது,” என்று திங்களன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது சுகாதார மற்றும் நோய்த் தடுப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் கூறினார். “முதல் மற்றும் இரண்டாவது கட்ட சோதனைகளின் முடிவுகள் இம்மருந்து  பாதுகாப்பானது, பயனுள்ளது மற்றும் சரியான நோய்தடுப்பு செயல்பாடுகளைத் தூண்டியது என்பதைக் காட்டியுள்ளது.”

“இந்தக் குறிப்பிட்ட நோக்கத்திற்கான அளவுகோல்களைப்  பூர்த்தி செய்வது மற்றும் தடுப்பு மருந்து உருவாக்குநர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது” சார்ந்து அவசர ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட கோவிட் -19-க்கான தடுப்பு மருந்தின்  மருத்துவ பரிசோதனைகளின் மூன்றாம் கட்டத்தின்  தேசிய மருத்துவக் குழுவின் தலைவரும், முதன்மை ஆய்வாளருமான டாக்டர் நவால் அல் காபி, கூறும்போது மருத்துவ பரிசோதனைகள் சரியான பாதையில் செல்கின்றன என்றும், இதுவரையிலான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக உள்ளன” என்றார். “ஆய்வு தொடங்கிய ஆறு வாரங்களுக்குள், 125 தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 31,000 தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்றுள்ளனர். இதுவரை அறிவிக்கப்பட்ட பக்க விளைவுகள் லேசானவை மற்றும் பிற தடுப்பூசிகளைப் போலவே எதிர்பார்க்கப்படுகின்றன, மேலும் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை , “என்றும் கூறினார்.

தடுப்பு மருந்தின் மதிப்பீடு “அவசர மற்றும் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கான உரிமத்தின் கீழ், இலக்காக்கப்பட்ட குழுக்கள், தயாரிப்பு பண்புகள், மருத்துவ ஆய்வுகள் தரவு மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து அறிவியல் சான்றுகளையும் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “தடுப்பு மருந்தை  உருவாக்கியவர்களுடன் ஒருங்கிணைந்து, தடுப்பு மருந்தின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் சுகாதார அதிகாரிகள் பின்பற்றியுள்ளனர், ” டாக்டர் அல் காபி கூறினார். கோவிட் -19 செயலிழக்கச் செய்யப்பட்ட தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் ஜூலை 16 அன்று அபுதாபியில் வெளியிடப்பட்டது.

அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (செஹா) ஜூலை மாதம் சுகாதாரத் துறை – அபுதாபி, ஜி 42 ஹெல்த்கேர் மற்றும் சீன மருந்து நிறுவனமான சினோபார்ம் சிஎன்பிஜி – தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் – ஆகியவற்றுடன், அதன் மருத்துவ பரிசோதனைகளின் மூன்றாம் கட்டத்தை மேற்கொள்ளவும், விரைந்து முடிக்கவும் ஒன்றினைந்துள்ளது.

செஹாவைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ பயிற்சியாளர்கள் குழு மாதிரி சோதனைகளை ஒருங்கிணைத்து நிர்வகித்து வருகிறது. தன்னார்வலர்களுக்கு உரிய தடுப்பு மருந்து அதற்க்கான குறிப்பிட்ட அளவுகளில் வழங்கப்பட்டு சோதனை மையங்களில் கண்காநிக்கப்படுகிறனர். இவர்கள் 42 நாட்களுக்கு தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் குறைந்தது 17 தடவைகள் சோதனை மையங்களுக்குச் செல்ல வேண்டும். இந்த நேரத்தில், தனிநபர் நாட்டிற்கு வெளியே பயணம் செய்யக்கூடாது, மேலும் கிளினிக்குகளுக்கு எளிதாக அணுக வேண்டும். இதற்குப் பிறகு, ஆறு மாதங்கள் வரை தொலைதொடர்பு மூலம் அவ்வப்போது பின்தொடர்வுகள் நடத்தப்படும்.