புதாபி

அமீரகம் வழியாக செல்லும் பயணிகள் ஊரை சுற்றிப் பார்க்க விசா வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் என்பது ஏழு நகரங்களின் கூட்டமைப்பு ஆகும்.  அவை தலைநகரமான அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா, ஷார்ஜா, துபாய், ராச் அல் கைமா, உம்ம் அல் கைவைன் ஆகியவை ஆகும்.   உலகின் பெரும்பாலான பயணிகள் இந்த நகரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக செல்கின்றனர்.   ஆனால் சட்டப்படி விசா இல்லாத காரணத்தினால் அவர்களால் நகரினுள் செல்ல இயலாது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் முதலில் துபாயில் இவ்வாறு செல்லும் பயணிகளுக்கு ஊரை சுற்றிப் பார்க்க தற்காலிக விசா வழங்கும் திட்டத்தை அமீரக அரசு செயல் படுத்தியது.   இதனால் துபாய்க்கு பெருமளவில் குறைந்த கால சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

அதை ஒட்டி அமீரக அரசு அனைத்து நகரங்களிலும் இது போல அந்த வழியாக பயணிப்பவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  இதன் மூலம் அமீரகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதுடன், சுற்றுலா பயணிகள் மூலம் அதிக வருவாய் கிட்டும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.