டில்லி

ட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட மசோதா மிகவும் அபாயமானது என மார்க்சிஸ்ட் கட்சியின் நாளேடு தெரிவித்துள்ளது.

 

சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் பாஜக அரசால் திருத்தப்பட்டு அந்த மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது.  தற்போது அந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.   இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.   ஆயினும் பாஜகவுக்கு உள்ள அறுதிப் பெரும்பான்மை காரணமாக மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாளேடான பூப்பிள் டெமாக்ரசி என்னும் பத்திரிகை ஒரு தலையங்கம் வெளியிட்டுள்ளது.  அதில், “ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய புலனாய்வு  முகமை சட்டத் திருத்த மசோதாவுடன் தற்போதைய சட்டவிரோத செயல் தடுப்பு சட்ட மசோதாவும் சேர்ந்துள்ளது.  இவை இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறி மகள் உரிமையைப்  பறிக்கக் கூடும்.

இந்த சட்டங்கள் ஒருமைப்பாடு, ஜனநாயகம், மற்றும் குடிமக்கள் உரிமை ஆகியவற்றின் மீது ஒரு தாக்குதலை  உண்டாக்கும்.   முன்பே எதிர்பார்த்தபடி இந்த சட்டம் மோடி அரசால் மக்களின் உரிமைகள்  மற்றும் சுதந்திரத்தன்மையை பாதிக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க உதவும்.   இந்த சட்டத்திருத்தங்கள் மூலம் அரசு தனது உரிமைகளை மேலும் பலப்படுத்தி உள்ளது.

இந்த சட்டங்கள் கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்கள் அனைவரையும் பழிவாங்க அரசால் பயன்படுத்தப்படும்.    இதன் மூலம் எந்த ஒரு தனி மனிதரையும் தீவிரவாதி என அறிவிக்க முடியும்.   இது பல முறைகேடுகளுக்கு வழி வகுக்கும்.  இவ்வாறு ஒருவரைத் தீவிரவாதிகள் பட்டியலில் இணைத்து அரசு அதன் மூலம் அவரை  சமுதாயத்தின் கண்களுக்கு மோசமானவராகக் காட்டி அவரை ஒதுக்கி வைக்கச் செய்துவிடும்.

இந்த சட்டங்கள் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்போர் அனைவரையும் ஒடுக்க அரசுக்கு உதவும்.   அது மட்டுமின்றி அவர்கள் புரட்சிக்காரர்கள் எனக் கூறி அரசு நடவடிக்கை எடுக்க இந்த சட்டங்கள்  பயன்படுத்தப்படும்.  எனவே இதுவரை பிறப்பிக்கப்பட்ட சட்டங்களில் இது மிகவும்  பயங்கரமானது.” எனக் கூறப்பட்டுள்ளது.