உ.பி. ஹஜ் அலுவலகத்துக்கு மீண்டும் வெள்ளை நிறம்….எதிர்ப்பு வலுத்ததால் பனிந்தது பாஜக

லக்னோ:
கடும் எதிர்ப்பை தொடர்ந்து உ.பி. ஹஜ் அலுவலகத்திற்கு பூசப்பட்ட காவி நிறம் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

உ.பி.யில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் அரசு அலுவலகங்கள், அரசு கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகளை காவி நிறத்துக்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிப் பைகள், பேருந்துக்கள் காவி நிறம் பூசப்பட்டது.

இந்த வகையில் லக்னோவில் உள்ள ஹஜ் அலுவலகம் காவி மயமானது. இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. இஸ்லாமிய சமூதாயத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

எதிர்க்கட்சியான சமாஜ்வாடிகடும் கண்டனம் தெரிவித்தது. எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் வேறு வழியின்றி 24 மணி நேரத்தில் அந்த அலுவலக சுவரின் நிறத்தை வெள்ளை நிறத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே நிறத்தினை மாற்றிய குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed