மும்பை

நாடெங்கும் உள்ள உபேர் மற்றும் ஓலா டாக்சி ஓட்டுனர்கள் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையில் உபேர் மற்றும் ஓலா நிர்வாகத்தின் கீழ் பல வாடகைக் கார்கள் ஓடுகின்றன.   இவர்களுக்கு ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர்.   இந்த வாகன ஓட்டுனர்கள் தங்களுக்கு போதுமான அளவு வருமானம் கிடைப்பது இல்லை என குறையில் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் மும்பை வாடகைக்கார் ஓட்டுனர் சங்கத்தில் உள்ளனர்.

இந்த சங்கம் மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா என்னும் ராஜ் தாக்கரே கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.    தற்போது இந்த ஓட்டுனர்கள் தங்களுக்கு மாதத்துக்கு குறைந்தது ரூ.1.25 லட்சம் வருமானத்துக்கு நிர்வாகம் வகை செய்து தர வேண்டும்,  நீக்கப்பட்ட ஓட்டுனர்களை மீண்டும் இணைக்க வேண்டும்,  நிர்வாகத்தின் சொந்த வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்னும் கோரிக்கையை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்த வேலை நிறுத்தத்தினால்  மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளார்.    இந்த வேலை நிறுத்தம் மும்பையில் இருந்து டில்லி, பெங்களூரு, பூனே போன்ற நகரங்களுக்கும் பரவி உள்ளது.   தெலுங்கானாவின் தற்போது பள்ளித் தேர்வு நடைபெறுவதாலும், நகரின் ஐடி தொழிற்சாலைகள் பாதிக்கும் என்பதாலும் அம்மாநில ஓட்டுனர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துக் கொள்ளவில்லை.