அமெரிக்கா : உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

வாஷிங்டன்

மெரிக்க வர்த்தகத் துறை அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 4.2% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பொறுத்தே அமைகின்றது.   சமீப காலமாக அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் சற்றே சரியத் தொடங்கியதாக கூறப்பட்டது.   அதே நேரத்தில் அமெரிக்கா ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.

அதைத் தொடர்ந்து ஈரானுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்தது.   மேலும் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஈரானுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என மிரட்டியது.   இதனால் இந்நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் குறைய ஆரம்பித்துள்ளது.

மேலும் சீனாவுடனான வர்த்தக போரில் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தியது.   அதனால் சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் முழுவதுமாக நின்று போகும் நிலை உண்டாகி இருக்கிறது.

இவைகளால் ஏற்பட்ட பொருளாதார தொய்வுகளுக்கு இடையே தற்போது சற்றே அமெரிக்காவுக்கு தெம்பூட்டும் செய்தி ஒன்றை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.   அதன்படி அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.   சென்ற காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 4.2 % அதிகரித்துள்ளது.  அதற்கு முந்தைய காலாண்டில் 3% அதிகரித்தது.

இதற்கு அமெரிக்க அதிபர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.  அவர் பொருளாதார நிபுணர்களின் கணக்குப்படி இந்த காலாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி 5% அதிகரிக்கும் என கூறப்பட்டதாகவும் ஆனால் 4.2% மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் கூறி உள்ளார்.  மேலும் இதற்கு தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed