கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை:
சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் கொரோனா தடுப்பு உபகரணங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு முடிந்துள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் வசிக்கும் 300-க்கு மேற்பட்ட மக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.