வைகோ, லக்கானியை கலாய்க்கும் உதயநிதி!

download

தாத்தா, அப்பா என்று அரசியல் பாரம்பரியம் கொண்டவர் என்றாலும், “பாலிடிக்ஸா… வேணாம் பாஸ்” என்பார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் பதிவுகளைப்போட்டு அசரடிக்கிறார்.

நேற்று இவர் பதிவிட்டிருந்த பதிவு (படம்) இது. “மங்காத்தா” படத்தில் அஜீத்தும், ரகுமானும் சூதாட்ட பணத்தை ஏமாற்றி எடுத்துக்கொண்டு செல்லும் க்ளைமாக்ஸ் காட்சியை அப்படியே வைகோ, ராஜேஷ்லக்கானி ஆகியோரை வைத்து பதிவிட்டிருக்கிறார், உதயநிதி ஸ்டாலின்.

Untitled

“ஜெயலலிதாவிடம் 1500 கோடி ரூபாய் வாங்கிவிட்டார் வைகோ” என்றும், “ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் அவருக்கு ஆதரவாக செயல்பட்டார் தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி” என்றும் சிலர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் நிலையில் “தில்”லாக இப்படி பதிவிட்டிருக்கிறார் உதயநிதி.

அப்படின்னா, சீக்கிரம் (நேரடி) அரசியலுக்கு வந்துடுவாரோ?

கார்ட்டூன் கேலரி