உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கும் ரஜினியின் ’நெருப்புடா’ பாடலாசிரியர்..

’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’இது கதிர்வேலன் காதல்’, ’மனிதன்’, ’நண்பேன்டா’, ’கெத்து’, ’சைக்கோ’ போன்ற பல படங்களில் நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது ’கண்ணை நம்பாதே’, ’ஏஞ்சல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து அருண் ராஜா காமராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அருண்ராஜா காமராஜ் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்து கெஸ்ட்ரோலில் நடித்த ’கனா’ படத்தை இயக்கியவர். தவிர ரஜினியின் ’கபாலி’ படத்தில் ’நெருப்புடா’ பாடல் எழுதி பிரபலம் ஆனார். ஏற்கனவே பல்வேறு பாடல்கள் எழுதியிருப்பதுடன் பல படங்களில் நடித்தும் உள்ளார்.


இந்தியில் வெளியான ’ஆர்ட்டிகில் 15’ (Article 15) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக இப்படம் உருவாகவுள்ளது. ஜீ ஸ்டுடி யோஸ் மற்றும் போனி கபூரின் பே வியூ புராஜக்ட்ஸ் வழங்க ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கின்றார்.
இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக் கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறி உள்ளது.