Random image

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்

தயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘கண்ணே கலைமானே’ படத்துக்கு ‘யு’ சான்றிதழை திரைப்பட தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா இணைந்து நடித்துள்ள படம் ‘கண்ணே கலை மானே’.  இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் முழுவதும் மதுரை, வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு உருவானது.

இந்தப் படத்தில் வசுந்தரா கஷ்யப், நடிகை வடிவுக்கரசி, ஷாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச மாதமே முடிவடைந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. அதைத்தொடர்ந்து  படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.