மும்பை

காராஷ்டிர முதல்வராக பதவி ஏற்க உள்ள உத்தவ் தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க இன்று மாலை பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத நிலை உள்ளதால் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   சிவசேனா கட்சி,  தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகந்திஎன ஒரு கூட்டணி அமைத்து அதில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாககரேவை மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்தன.

இந்த கூட்டணி ஆளுநரிடம் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு விடுத்த கோரிக்கையை ஏற்ற மகாராஷ்டிர ஆளுநர் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்க்கு அரசு அமைக்க அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளார்.   இன்று நடைபெறும் ஒரு நாள் சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டாபேரவையின் 288 உறுப்பினர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, “சிவசேனா கட்சியுடன் 50 : 50 என்னும் விகிதத்தில் ஆட்சி அமைப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அதன் பிறகு அதை மறுத்தார்.  நான் அவரைப் போல் பொய் சொல்பவன் இல்லை.   அதனால் நாங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டோம்.

எங்களுடன் கூட்டணி வைத்திருந்தவர்கள் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தனர்.  ஆனால் 30 வருடங்களாக நாங்கள் யாரை எதிர்த்து வந்தோமோ அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.   எனக்கு ஆதரவு அளித்த சோனியா காந்தி மற்றும் சரத் பவாருக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.