ராமர் கோவில் : சிவாஜி கோட்டை மண் அளிக்கும் சிவசேனா தலைவர்

யோத்தி

காராஷ்டிராவில் உள்ள சிவாஜி கோட்டையில் இருந்து ஒரு கலயம் மண்ணை ராமர் கோவில் கட்ட சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே வரும் 24 ஆம் தேதி அளிக்க உள்ளார்

மகன் ஆதித்யாவுடன் உதவ் தாககரே

மகாராஷ்டிராவில் பாஜகவின் நட்புக் கட்சியான சிவசேனா கடந்த சில நாட்களாக பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது. பாஜக அரசு தேர்தலில் வாக்களித்த படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டாதது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே வரும் 24 மற்றும் 14 ஆம் தேதிகளில் அயோத்தி செல்ல உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் முக்கிய பிரமுகரும் சிவசேனா பிராமணர்கள் பிரிவின் தலைவருமான அமர்நாத் மிஸ்ரா, “உதவ் தாக்கரே வரும் 24 ஆம் தேதி அயோத்திக்கு புனிதப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சிவாஜி கோட்டை என்னும் சத்ரபதி சிவாஜி பிறந்த இடத்தில் இருந்து மண்ணை ஒரு கலயத்தில் எடுத்துச் சென்று அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களிடம் அளிக்க உள்ளார்.

இந்தப் பயணத்தில் உதவ் தாக்கரேவுடன் அவர் மகன் ஆதித்யாவும் உடன் சென்று பூஜைகளை நிகழ்த்த உள்ளார். சிவாஜி கோட்டையின் மண் கலயத்துக்கு அங்கு ராமர் கோவில் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் போதும் மங்கள ஆரத்தி எடுக்கும் போதும் உதவ் தக்கரே உடன் இருப்பார். அத்துடன் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சரயு நதி பூஜை மற்றும் ஆரத்திகளிலும் அவர் கலந்துக் கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.