மும்பை:

ன்று மாலை மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ள நிலையில், அவருடன் இணைந்து மேலும் 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 7 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மை பெற்றும், அதிகார பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக 30ஆண்டுகால கட்சிகள் இடையே பிணக்கு ஏற்பட்டு உறவு முறிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சி மேற்கொண்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  கட்சிகளின் ஆதரவை நாடியது. 3 கட்சிகளும் சேர்ந்த மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை உருவாக்கி, குறைந்தபட்ச செயல் திட்டமும் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே 5ஆண்டுகளுக்கு முதல்வராக நீடிப்பார் என்றும், என்சிபிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தற்போது உத்தவ் தாக்கரே உடன் பதவி ஏற்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக முதல்வர் உத்தவ் தாக்கரே உடன், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலா 2 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,

மாநில முதல்வராக சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரேவும்,

அமைச்சர்களாக

காங்கிரஸ் கட்சியில், பாலாசாகேப் தோரட் ( Balasaheb Thorat),  நிதின் ரவுத் (Nitin Raut)

தேசியவாத காங்கிரஸ் கட்சியில், சாஹன் புஜ்பால்(Chaggan Bhujbal), ஜெயந்த் பட்டீல் (Jayant Patil )

சிவசேனா கட்சியில், ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde), சுபாஷ் தேசாய் ( Subhash Desai) 

ஆகியோர் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அஜித்பவாருக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்படும் என வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும்  டிசம்பர் 3ந்தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.