மராட்டியத்தின் பணக்கார எம்எல்சி முதல்வர் உத்தவ் தாக்கரே..!

மும்பை: மராட்டிய சட்ட மேலவைக்கு சமீபத்தில் போட்டியின்றி தேர்வானர்களில், முதல்வர் உத்தவ் தாக்கரேதான் மிகவும் பணக்கார எம்எல்சி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், மராட்டிய சட்டமேலவைக்கு வேட்புமனு தாக்கலின்போது, தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தெரிவித்தனர் வேட்பாளர்கள்.

இதில், முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.61,89,57,433 கோடி எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.81,37,17,320 கோடி எனவும் மொத்தம் ரூ.143,26,74, 763 கோடி என்பதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் மராட்டிய சட்டசபையின் மிகவும் பணக்கார எம்எல்சி இவர்தான் என்பது தெரியவந்துள்ளது.

பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ரஞ்சித் சிங் மொஹித் பாட்டீல் தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.17,68, 26,081 கோடி எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.32,53,36,515 கோடி எனவும் மொத்தம் ரூ.50,21,62,696 என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் இவர் இரண்டாவது பணக்கார எம்எல்சி என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.