மும்பை:
காராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21ந்தேதி சட்டமேலவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே, இன்று  இன்று சட்டமேலவை உறுப்பினர் போட்டியிடுவதற்காக  வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணாக கூட்டணி உடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியை கைப்பற்றியது. மாநில முதல்வராக சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார்.
அவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில்,  அரசியல் சட்டப்படி  சட்டமன்றத்தின் அவை உறுப்பினர் அல்லாத ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு அவை உறுப்பினராக பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் அவரது பதவி தானாகவே தகுதியிழந்து விடும்.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே பதவி ஏற்று 6 மாதம் முடிவடைய இன்னும்15 நாபட்கள் மட்டுமே உள்ள நிலையில், சட்டமேலவை தேர்தலை விரைவாக  நடத்த மத்தியஅரசை வலியுறுத்தினார். அதையடுத்து  காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் இடங்களுக்கு  வரும்  21-ம் தேதி   தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே  இன்று சட்டமேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என தெரிகிறது. இதன் காரணமாக உத்தவ் தாக்கரே போட்டியின்றி வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.