மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக நாளை மாலை பதவி ஏற்கிறார் உத்தவ் தாக்ரே!

மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை காலை பதவி ஏற்கிறார். முன்னதாக இன்று கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனா தலைமையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி,  ஆட்சி அமைக்க கவர்னர் கோஷ்யாரியிடம் உரிமை கோரியுள்ளன. அதன்படி அவர்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி சார்பில், முதல்வராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  அவர் நாளை மாலை மும்பையின் தாதர் என்ற பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்காவில் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சிவாஜி பூங்காவில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறன.

பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளை மாலை 6.40 மணியளவில் நடைபெறும் என்றும், மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவுக்கு  பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்பார்களா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இன்று காலை திடீரென கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு தனது மனைவியுடன் வருகை புரிந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்துப் பேசினார்.