மக்களவை தேர்தல் 2019: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

கேரள மாநிலத்தின் மக்களவை தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் சமீபத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. பிரதமர் வேட்பாளரை தீர்மாணிக்கும் இத்தேர்தலில் கேரள மாநிலம் அதீத முக்கியத்துவம் பெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்திரா, ராஜீவுக்கு பிறகு தென்மாநிலத்தில் களமிறங்கும் மூன்றாவது நேரு குடும்ப வாரிசாக ராகுல்காந்தி பார்க்கப்படுகிறார். மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கான காலை 10.50 மணி நிலவரப்படி,

ஐக்கிய ஜனநாயக முன்னணி: 19 தொகுதிகள்

இடதுசாரி ஜனநாயக முன்னணி: 01 தொகுதி

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் சபரிமலை விவகாரத்திற்கு பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, துவக்க சுற்றுகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், பின்னர் பின்னடைவையே சந்தித்து வருகிறது.

You may have missed