கேரள இடைத்தேர்தல் முடிவுகள்: 4ல் காங்கிரஸ், 1ல் இடதுசாரிகள் முன்னணி முன்னிலை

கேரளாவின் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம் உட்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், 2 தொகுகளில் இடதுசாரிகள் கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன.

கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி, கடும் மழைக்கு நடுவே திரளான அளவில் மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட போது, மஞ்சேஸ்வரம், கோன்னியில் காங்கிரஸ் கூட்டணியும், வட்டியூர்காவு, அரூர் தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணியும், எர்ணாகுளத்தில் பாஜகவும் முன்னிலை வகித்து வந்தன.

இந்நிலையில் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதின் 2வது சுற்றில், தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகித்த எர்ணாகுளம் தொகுதியிலும், இடதுசாரிகள் முன்னிலை வகித்த கோன்னி தொகுதியிலும், தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் 4 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், 1 தொகுதியில் இடதுசாரிகள் முன்னணியும் முன்னிலை வகித்து வருகின்றன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-