னோபாலாவின் நிறுவனமான பிக்சர் ஹவுஸ், ட்ரெண்ட் லவுட் நிறுவனத்துடன் இணைந்து நன்னயம் எனும் ஒரு சிறந்த குறும்படத்தை தயாரித்து உள்ளது. விஷன் டைம் யூ ட்யூப் சேனலில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதில் நடிகர்கள் உதயா மற்றும் அம்மு இக்குறும்படத்தின் முன்னணி கதாபாத்திரங் களை ஏற்று நடித்துள்ளனர். ஜெய பிரகாஷ், சத்யப்ரியா, மற்றும் காமேஸ்வரன் போன்ற வர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெஞ்சைத் தொடும் இக்கதை ஒரு பெண் ணைப் பற்றியது. சாதி சம்பிரதாயங்களில் அதி தீவிர நம்பிக்கை உடைய ஒரு தந்தைக்கும், சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்க போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதையாக இது உருவாகியிருக் கிறது. உலகம் கொரோனாவால் பாதிக்கப் பட்டு அவதிப்படும் பொழுது நடக்கும் கதை யாக இது திகழ்கிறது.
ட்ரெண்ட் லவுட் தலைமை நிர்வாக அதிகாரி சிதம்பரம் இக்குறும்படத்தை பற்றி கூறுகையில்,”பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய மனோபாலா இக்குறும்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். திறமையான இயக்குனரும் நடிகருமான திரு. மனோபாலா உடன் இணைந்து இக்குறும்படத்தை தயாரிப்பதில் நாங்கள் பெருமிதமும், பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். இக்குறும்படம் எல்லா தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம். இன்னும் பல அர்த்தமுள்ள நல்ல படங்களை வருங்காலத்திலும் தயாரிப்போம் என்று நம்புகிறேன்.” என்றார்.
பாடகர் அஜீஷ் இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை உமாபதி செய்திருக்கிறார். நன்னயம் குறும்படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளது .
#