மீண்டும் உருவாகிறது ‘அக்னி நட்சத்திரம்’…..!

மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’.

மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா -விதார்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

இந்த படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

எல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார். வரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

You may have missed