சன் குழும கன்னட சேனல் உதயா நியூஸ் மூடப்படுகிறது

பெங்களூரு

ன் குழுமத்தை சேர்ந்த கன்னட சேனல் உதயா நியூஸ் சேனலை மூடப்போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சன் குழுமம் தனது தொலைக்காட்சியை அந்தந்த மொழிகளில் நடத்தி வருகிறது.  அவ்வகையில் கர்னாடாகவில் கன்னட மக்களுக்காக நடத்தப்படும் சேனல் உதயா நியூஸ்.  இந்த சேனலை மூடப்போவதாக அறிவித்துள்ளது.

அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், “நாங்கள் கடந்த 19 ஆண்டுகளாக உதயா நியூஸ் சேனலை நடத்தி வருகிறோம்.   இதற்காக நாங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளோம்.  ஆனால் கடந்த சில வருடங்களாக எங்களுக்கு இந்த சேனல் மூலம் மிகவும் பண நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

மற்ற சேனல்களின் போட்டியால் எங்களுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வருகிறது.  இது தற்போதைய சூழ்நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது.

இதனால்  வரும் ஆண்டுகளில் எங்களுக்கு மேலும் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால் நாங்கள் இந்த சேனலை வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் முழுவதுமாக மூட உத்தேசித்துள்ளோம்” என சன் குழும நிர்வாகம்  காரணம் தெரிவித்துள்ளது.