மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி படம் பூஜையுடன் தொடக்கம்….!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் லாஃடவுன் தளர்வுக்கு பிறகு தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பதால், சென்னையில் படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாயகியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக தில்ராஜ், இசையமைப்பாளராக அரோல் கொரோலி, கலை இயக்குநராக டி.ராமலிங்கம், எடிட்டராக ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.