‘ஆர்டிகிள் 15’ படப்பிடிப்பில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி…..!

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’.

இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். கடந்த ஏப்.10 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது.

இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படப்பிடிப்பில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.